புதன், 18 பிப்ரவரி, 2009

நார்ப் பூக்கள்..


*

அழகே!

நீ காசு கொடுத்து

கடந்த போது ...

முழமிட்ட சரத்தின்

பூக்காரியின் முழங்கைக்குப் பின்னால்..

நார்ப் பூக்களின் முணுமுணுப்பு...

' நாம் கொடுத்து வைத்தது -

அவ்வளவுதான்..'

*********

திங்கள், 16 பிப்ரவரி, 2009

தொடுவானம்..


*

சில மைல்...

ூரங்கள்.. நம்மிடையே..!

எண்ணங்கள்... அருகருகே..!

நெடு நேரம்..

பேசி ஓய்ந்திருந்தது... மனசு..!


**********

பார்வை..


*

திறந்து வைத்த..

புத்தகம்..

விரல் அழைத்து..

செல்கிறது விழிகளை.!


********

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

கடன்..!

*

இருவரும்

புன்னகை மாறாமல்

கடக்கிறோம்..

திருப்பித் தருகிறோமா?

திரும்பப் பெறுகிறோமா?

புரியவில்லை..!


************


வாசல்..


*

உன்
இமை நிழலில்..
நிற்கிறேன்... பெண்ணே..

கண்களைத் திறந்து வை..!

*********

வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

பயணம்..


*
உனக்கான
வார்த்தைகள் என்னிடமிருக்கிறது.
என் மௌனத்தை..
மொழிகளாக்கு.
மனதின் பயணத்தில்
மறுபடியும்.. மௌனத்தை
வந்து சேருவாய்..!

**********

இதழ்...'கள்'..


*
மூடிய
இதழ்களின்..
வண்ணத்தின் வரிகளை..
முத்தமாய் வாசிப்பேன்.

*******

துருவங்கள்..


*
கிராமத்தில்..
இரண்டு கிளைச் சாலைகளில்..
நம் வீடுகள் -
நாம் இன்று வரை..
சேர்ந்தே இருப்பது தெரியாமல்..!

**********

வியாழன், 5 பிப்ரவரி, 2009

தெளிக்கும் புனிதங்கள்..


*
நதிகள்
பாவம்!
புனிதத்தில் கால்களை
கழுவி..
பாவத்தை
தலையில் தெளிக்கும்
மனிதர்கள்.!

******

துளி..


*
உயிர்
கசிவின் ஒலி..
பிரபஞ்சத்தின்..
கதவைத் தட்டுகிறது.

*******